Sunday, 20 May 2018

மஇகா மட்டுமல்லாது அம்னோவும் அலுவலகத்தை மூடலாம்- சிவநேசன்

ரா.தங்கமணி

ஈப்போ-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் தோல்வி கண்டவுடன் மஇகா மட்டுமல்ல அம்னோவும் அலுவலகத்தை காலி செய்து விடும் என சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.

2004ஆம் ஆண்டு சுங்காய் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டபோது அந்த தொகுதி விட்டு ஓடி விடாமல் மக்களுக்கான சேவை முன்னெடுத்தேன்.

2008ஆம் ஆண்டு தேர்தலில் இங்கு வெற்றி பெற்ற நிலையில் எனது சேவை இங்குள்ள மக்களுக்கு தொடர்ந்தது. ஆனால் மஇகா வேட்பாளராக களமிறங்கியவர் தோல்வி கண்டவுடன் சேவை மையத்தை மூடிவிட்டு சென்றுவிட்டார்.

அதேபோன்று 2013ஆம் ஆண்டு தேர்தலில் மசீச இங்கு போட்டியிட்டது. மஇகாவினால் இங்கு மக்களுக்கு முறையான சேவை வழங்கப்படாத நிலையில் 14ஆவது பொதுத் தேர்தலில்  மஇகா மீண்டும் போட்டியிட்டது.

தேர்தலின்போது அங்கு சேவை மையம் தொடங்கப்பட்ட நிலையில் மஇகா வேட்பாளர் தோல்வி கண்டவுடன் அந்த அலுவகத்தை மூடி  சென்று விட்டனர்.

இதைதான் கடந்த காலங்களில் மஇகா செய்த நிலையில் தற்போது மத்திய, மாநில அரசுகளை தேசிய முன்னணி இழந்துள்ள சூழலில் சேவை மையத்தை திறந்து மக்களுக்கு சேவை செய்ய மஇகா மட்டுமல்லாது அம்னோவும் கூட பின்வாங்கலாம் என சிவநேசன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment