Tuesday, 15 May 2018

பொய் செய்தி சட்ட மசோதா அகற்றப்படாது; ஆய்வு செய்யப்படும்- துன் மகாதீர்

கோலாலம்பூர்-
நம்பிக்கை கூட்டணி ஆட்சியை கைப்பற்றினால்  2018 பொய் செய்தி தடுப்பு சட்ட மசோதா அகற்றப்படும் என முன்பு வாக்குறுதி கூறப்பட்ட நிலையில் இப்போது அது மறு ஆய்வு செய்யப்படும் என்று பிரதமர் மகாதீர் முகம்மது கூறினார்.

தேசிய  முன்னணி அரசாங்கம் கடந்த ஏப்ரல் மாதம் அமல்படுத்திய பொய் செய்தி சட்ட  மசோதாவை புத்ராஜெயாவை கைப்பற்றினால் அகற்றப்படும் என நம்பிக்கை கூட்டணி இதற்கு முன் கூறியிருந்தது.

தற்போது ஆட்சியை நம்பிக்கை கூட்டணி கைப்பற்றியுள்ள நிலையில், 2018 பொய் செய்தி சட்ட மசோதா  நீக்கப்படுமா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த துன் மகாதீர், 'நாம் மறு ஆய்வு செய்வோம்' என கூறினார்.

இந்த சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்படுவோருக்கு 6 மாத சிறைத் தண்டனையும் 500,000 வெள்ளி வரைக்குமான அபராதம் விதிக்கப்படலாம்.

No comments:

Post a Comment