புனிதா சுகுமாறன்
ஈப்போ-
பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் மனிதவள அமைச்சராக பதவியேற்கவுள்ள மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக திருமதி இந்திரா காந்தி தெரிவித்தார்.
தனது பிள்ளைகள் ஒருதலைபட்சமாக மதமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து நடத்திய சட்டப் போராட்டத்தில் பெரும் துணையாக இருந்தவர் எம்.குலசேகரன்.
பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் அவ்வழக்கில் வெற்றி பெற்றதற்கு குலசேகரனே முழு காரணம் ஆவார்.
ஒரு வழக்கறிஞராக இருந்து மதமாற்ற சட்டப் போராட்டத்தில் வெற்றியை தேடி தந்த குலசேகரன் நிச்சயம் மனிதவள அமைச்சராக பொறுப்பேற்று தொழிலாளர் வர்க்கத்தின் நிலையான வாழ்வாதாரத்திற்கு அடித்தளமிடுவார்.
அவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு குலசேகரன் நிச்சயம் தீர்வு காண்பார் என்ற நம்பிக்கை உள்ளது என திருமதி இந்திரா காந்தி குறிப்பிட்டார்.
தனது முன்னாள் கணவரால் மூன்று பிள்ளைகள் மதமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து திருமதி இந்திரா காந்தி நடத்திய சட்டப் போராட்டத்திற்கு துணையாகவும் வழக்கறிஞராகவும் ஆஜராகி வெற்றியை தேடி தந்தவர் குலசேகரன் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment