Wednesday, 9 May 2018

ஆலயங்களை ஒருங்கிணைப்புத் திட்டம் எதனால் சிலாங்கூர் மாநிலத்தில் தொடங்கப்படவில்லை? – சமூக சேவையாளர் பெருமாள் சிதம்பரம் கேள்வி




ஷா ஆலாம், மே 8-

மலேசியாவில் உள்ள கோயில்களை ஒரே செயல்பாட்டில் ஒருநிலைப்படுத்தும் நோக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் மாநில அரசின் ஒத்துழைப்போடு, இந்திய சமுதாயத்தின் மீதும், சமயத்தின் மீதும் ௮க்கறையுள்ள சில அரசு சார்பற்ற இயக்கங்கள் ஒன்றிணைந்து ஆலோசித்தனர்.

இந்த திட்டம், பினாங்கு மாநிலத்தில் பேராசிரியர் ராமசாமி தலைமையில் கடந்த 5 ஆண்டுகளமாக சிறப்பாக செயல்படுகின்றது. இதன் வழி இந்து சமயத்திற்கு ஒத்து வராத, தவறான சமய சடங்குகளை கடைப்பிடிப்பவர்களுக்கும், நிர்வாகத்தில் காணப்படும் தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்க வழி வகுக்க வாய்ப்பாக இருக்கும்.

இப்பிரச்சினையை பொருத்தமட்டில், நமக்கு நாமே சுமுகமான முறையில் தீர்த்து கொள்வதன் மூலம், நம் இன பெருமை காக்கப்படும். நீதிமன்றத்தில் வழக்குத் தேவையில்லை மற்றும் நம் சமூகத்திற்கு சமய விழிப்புணர்வு ஏற்பட்டால் சமூக சீர்கேடுகள் குறைய வழி வகுக்கும் என சமூக சேவையாளர் பெருமாள் சிதம்பரம் குறிப்பிட்டார்.

நம் சமுதாயத்தின் மீது அக்கறையுள்ள அன்பர்கள் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், ஏன் செயல்படாமல் பொது? இதற்கு தலைமையேற்ற அன்பர்கள் ௭ன்ன ஆனார்கள் ? மாநில அரசின் ஒத்துழைப்பு ௭ன்னவாயிற்று ? நான் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் கேட்கவில்லை. செயல்படுத்த முடியாமல் போன காரணம் ௭ன்ன என்றும் மீண்டும் செயலாக்கம் பெற ௭ன்ன வழி என பல கேள்விகளை அவர் முன்வைத்தார்.

No comments:

Post a Comment