Tuesday, 22 May 2018

அல்தான் துயா கொலை; சிருலுக்கு மன்னிப்பு வழங்கக்கூடாது- ராம் கர்ப்பால்


கோலாலம்பூர்-
மங்கோலிய நாட்டு மாடல் அழகி அல்தான் துயா ஷாரிபு கொலை வழக்கில் உண்மைகளை அம்பலப்படுத்த தயார் எனவும் தனக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் மரணத் தண்டனை குற்றவாளியான சிருல் அஸாரின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவி சாய்க்கக்கூடாது என புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங் கூறினார்.

சிருலின் இந்த கோரிக்கை 'பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓர் அவமதிப்பு' என கூறிய அவர், இதனை அரசாங்கம் ஏற்கக்கூடாது என்றார்.

மேலிடத்து உத்தரவின்படிதான்  மற்றவர்களை கொலை செய்தோம்; ஆனால் அல்தான் துயாவை கொலை செய்தது மட்டுமே தான் செய்த குற்றம் என முரணான கருத்துகளை வெளியிட்டு வருகிறார் என ராம் கர்ப்பார் கூறினார்.

இந்த கொலை வழக்கில் இன்னும் விளக்கம்  அளிக்காத சாட்சிகள் பலர் வெளியே உள்ளனர் என கூறிய ராம் கர்ப்பால், சிருலுக்கு பொது மன்னிப்பு வழங்கக்கூடாது, மாறாக அவர் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதும் உண்மையை வெளிகொணர விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளலாம் என்றார்.

No comments:

Post a Comment