கோலாலம்பூர்-
பிரதமர் துன் டாக்டர்
மகாதீர் தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் இரு இந்தியர்கள் முழு அமைச்சர்களாக
பதவி ஏற்கவுள்ளனர்.
ஈப்போ பாராட் நாடாளுமன்ற
உறுப்பினர் குலசேகரன், மனிதவள அமைச்சராகவும், பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த்
சிங் தகவல் தொடர்பு பல்லூடக அமைச்சராகவும் பதவி ஏற்கவுள்ளனர்.
வரும் திங்கட்கிழமை
13 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியலை துன் மகாதீர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படும்
வேளையில், அமைச்சர்களின் பட்டியலை இன்று மாமன்னர் சுல்தான் முகமட் வி-விடம் ஒப்படைத்தார்.
No comments:
Post a Comment