Thursday, 17 May 2018

நிபந்தனையற்ற விடுதலை- டத்தோஶ்ரீ அன்வார்


கோலாலம்பூர்-
தனக்கு வழங்கப்பட்டுள்ள அரச மன்னிப்பு எவ்வித நிபந்தனையும் அற்றது என டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

தான் சிறையில் அடைக்கப்பட்டது தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் உட்பட யார் மீதும் வருத்தம் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
இன்று காலை செராஸ் புனர்வாழ்வு மருத்துவமனையிலிருந்து வெளியேறிய டத்தோஶ்ரீ அன்வார், நஜிப் உட்பட யார் மீதும் வருத்தம் கொண்டது இல்லை.

அதே வேளையில் தனக்கு ஆதரவு அளித்த 'வழிகாட்டியான' துன் மகாதீருக்கு நன்றி கூறி கொள்கிறேன்.

மாமன்னர் தனக்கு அளித்து அரச மன்னிப்பு முழுமையானதும்; நிபந்தனையற்றதும் ஆகும். ஆகவே தன் மீதான குற்றப்பதிவுகள் தானாகவே அகற்றப்படும் என நம்பிகிறேன் என்று டத்தோஶ்ரீ அன்வார் கூறினார்.

No comments:

Post a Comment