Wednesday, 9 May 2018
இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்ளும் நஜிப் - மகாதீர்; மக்களை கவர்வது யார்?
ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்கு இன்னும் சில மணிநேரங்களே எஞ்சியுள்ள நிலையில் தேசிய முன்னணியின் தலைவர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவர் துன் மகாதீர் முகமதுவும் மக்களிடம் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
இன்று இரவு 10.00 மணியளவில் தொலைக்காட்சி அலைவரிசை வாயிலாக டத்தோஶ்ரீ நஜிப்பும் சமூக ஊடகத்தின் வாயிலாக துன் மகாதீரும் இந்த பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
இந்த தேர்தலில் ஆட்சியை அமைப்பது யார்? என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ள நிலையில் இவ்விரு தலைவர்களும் மக்களிடம் சொல்ல போகும் தகவல்கள் என்ன, கொடுக்கப்போகும் வாக்குறுதிகள், மேற்கொள்ளப்படும் திட்டங்கள் என்ன? என்பது மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
ஆட்சி பீடத்தை அலங்கரிக்க போராடும் இவ்விரு தலைவர்களில் யாருடைய வாக்குறுதி மக்களை கவரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment