Wednesday, 23 May 2018

பிடிபிடிஎன்: கறுப்பு பட்டியலில் நீங்களா? இனி தாரளமாக பறக்கலாம்


கோலாலம்பூர்-
பிடிபிடிஎன் எனப்படும் கல்வி கடனுதவி திட்டத்தால் கறுப்பு பட்டியலிட்டவர்கள் இனி எவ்வித தடையுமின்றி வெளிநாடுகளுக்கு செல்லாம் என்று கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் தெரிவித்தார்.

உயர்கல்விக்காக கடனுதவியைப் பெற்ற மாணவர்கள் அதனை செலுத்த தவறியததால் அவர்களின் பெயர்கள் கறுப்பு பட்டியலிடப்பட்டன. இதனால் அவர்கள் வெளிநாட்டுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, இனி சம்பந்தப்பட்டவர்கள் மலேசிய குடிநுழைவுத் துறையிடம் தொடர்பு கொண்டு தங்களின் பெயரை கறுப்புப் பட்டியலிலிருந்து அகற்றி கொள்ளலாம்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலின்போது பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் கொள்கை அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதியை இது நிறைவேற்றியது.
பிடிபிடிஎன் கடனுதவி பெற்றவர்கள் மாதம் வெ.4,000 வெள்ளி வருமானம் பெறும் வரையில் இந்த கடனை செலுத்துவதில் விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளது. வெ.4,000 வருமானம் பெற்றவுடனே அவர்கள் தங்களின் கடனை செலுத்த வேண்டும் என்றார் அவர்.







No comments:

Post a Comment