கோலாலம்பூர்-
மங்கோலிய மாடல் அழகி அல்தான் துயா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் போலீஸ் அதிகாரி சைருல் அஸார் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என பிகேஆர் கட்சியின் ஆலோசகர் அன்வார் இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இக்கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்ற சைருல் அஸார், 2006ஆம் ஆண்டு அல்தான் துயாவை கொலை செய்யுமாறு முக்கிய புள்ளிகள் உத்தரவிட்டதால் அவ்வாறு செய்ததாக கூறியிருந்தார்.
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பின் நெருங்கிய உதவியாளரான அப்துல் ரசாக்கில் காதலிதான் அல்தான் துயா ஆவார். இக்கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அப்துல் ரசாக் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
அல்தான் துயா கொலை வழக்கில் சைருல் அஸாரும், அஸிலா ஹெட்ரி ஆகியோர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில் நஜிப்பின் எதிர்க்கட்சியினர் பல்வேறு கருத்துகளை வெளீயிட்டு வந்தனர்.
இக்கொலை சம்பவம் தொடர்பில் பல குழப்பங்கள் நீடித்து வருவதை சுட்டி காட்டிய அன்வார் இப்ராஹிம், ஆஸ்திரேலியாவில் உள்ள சைரில் மீண்டும் மலேசியாவுக்கு அழைத்து வரப்பட்டு புதிய விசாரணை தொடங்கப்பட வேண்டும என ஆஸ்திரேலிய நாளிதழுக்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment