ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
சொத்து விவரங்களா? கட்சி தேர்தலா? என்ற இரு வேறு கேள்விகளோடு மஇகா மத்திய செயலவைக் கூட்டம் காரசாரமாக அரங்கேறியுள்ளது.
கட்சியின் சொத்து விவரங்கள் குறித்து தவறான விமர்சனங்கள் மக்கள் மத்தியில் எழுந்து வருவதால் அதனை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும் இதனால் கட்சி உறுப்பினர்களும் முழுமையான சொத்து விவரங்களை அறிந்து கொள்ள முடியும் எனவும் கட்சி தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்த டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் குரலெழுப்பியுள்ளார்.
இதன்போது உடனே பேசிய கட்சி தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.சுப்பிரமணியம், இவ்விவகாரத்தை பேசி நீங்கள் ஹீரோவாக வேண்டாம். இப்போது கட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால் அதில் கவனம் செலுத்துவோம் என குரலை உயர்த்தியுள்ளதாக தெரியப்படுகிறது.
கட்சித் தேர்தலுக்கு இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள பூதாகரமான சூழல் மஇகாவை அடுத்தக்கட்டத்திற்கு எவ்வாறு கொண்டுச் செல்லப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
No comments:
Post a Comment