Thursday, 31 May 2018
நாட்டின் கடனை அடைக்க சிறப்பு திட்டம் - துன் மகாதீர்
கோலாலம்பூர்
நாட்டின் கடனை அடைக்க மலேசியர்கள் நிதியுதவி அளிக்கும் பொருட்டு சிறப்பு திட்டம் ஒன்றை அமல்படுத்தவிருப்பதாக இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்
14 வது போது தேர்தலில் பக்காத்தான் ஹாராபான் ஆட்சியை கைப்பற்றிய பிறகு முன்னாள் தேசிய முன்னணி அரசாங்கத்தின் 1எம்.டி.பி. முறைகேடு உட்பட பல திட்டங்களினால் நாட்டின் கடன் அதிகளவு பெருகியுள்ளது என்று அவர் தெரிவித்தார்
நாட்டின் கடனை அடைக்கும் பொருட்டு மக்களிடமிருந்து நிதியுதவி பெறு வகையில் 'தாபோங் ஹராப்பான் மலேசியா' திட்டத்தை தொடங்கவிருப்பதாக பிரதமர் கூறினார்.
பக்காத்தான் ஹாராப்பானின் முக்கிய பொறுப்புகள் வகிக்கும் தரப்பினரகளிடமிருந்து பெறப்பட்ட நிதி அனைத்தும் நாட்டின் மீது அவர்கள் கொண்டுள்ள தேசப்பற்றை விவரிப்பதாகவும் அனைத்து தரப்பினருக்கும் தமது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் துன் மகாதீர் குறிப்பிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment