Sunday, 6 May 2018
'வாக்குகள் சிதறலாம்- கனவு கலையலாம்'- முற்றுகிறது மோதல்
ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர், பிஎஸ்எம் கட்சிகளிடையே நீடிக்கும் மோதல் பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள போதிலும் நின்றபாடில்லை.
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த இரு தவணைகளாக எதிர்க்கட்சி வசமான நிலையில் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்தெந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் இத்தேர்தலில் பக்காத்தான் கூட்டணி சார்பில் டாக்டர் ஜெயகுமாருக்கு போட்டியிடும் வாய்ப்பு வழங்காமல் எஸ்.கேசவனை வேட்பாளராக களமிறக்கியுள்ளது. இதனால் டாக்டர் ஜெயகுமார் தனது பிஎஸ்எம் கட்சியின் கீழ் போட்டியிடுவதால் பாஸ் கட்சியையும் சேர்த்து நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
எதிரணியில் உள்ள பிகேஆரும் பிஎஸ்எம் கட்சியும் வேட்பாளரை களமிறக்கியுள்ளதால் எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் வாக்குகள் சிதறடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இதன் அடிப்படையில் தேசிய முன்னனி இங்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதால் புத்ராஜெயாவை கைப்பற்றும் எதிர்க்கட்சியின் 'கனவு' தகர்க்கபடலாம் என்ற ஆதங்கத்தில் பிகேஆர்- பிஎஸ்எம் கட்சி ஆதரவாளர்களிடையே சமூக வலைதளங்களில் மோதல் முற்றுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment