கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது
பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியை கைப்பற்றினாலும், தேசிய முன்னணியின்
செனட்டர் பதவிகளிலிருந்து விலக மாட்டோம் என்று பெயர் குறிப்பிட விரும்பாத தே.மு, மூத்த
செனட்டர் கூறினார்.
பக்காத்தான் ஆட்சியை
கைப்பற்றினாலும் தே.மு. செனட்டர் பதவியை விலக வேண்டிய அவசியம் ஒருபோதும் கிடையாது. தற்போது
உள்ள புதிய அரசாங்கம் எங்களை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
புதிய அரசாங்கம்
அமலுக்கு கொண்டு வரும் சட்டங்களை மறு ஆய்வு செய்வதுதானே எங்களது பணி. பக்காத்தான் ஹராப்பான்
கொண்டு வரும் திட்டங்களை நாங்கள் ஏன் நிராகரிக்கப்போகிறோம்?
தேசிய முன்னணியின்
செனட்டர்கள் மாமன்னரால் நியமிக்கப்பட்டார்களே தவிர மக்களால் அல்ல. ஆதனால், செனட்டர்
பதவியை நாங்கள் ஏன் ராஜினமா செய்ய வேண்டும்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
No comments:
Post a Comment