Sunday, 20 May 2018

மஇகா தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன் - டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்


ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
மஇகா தேசியத் தலைவர் பதவிக்கு தாம் போட்டியிடவிருப்பதாக மேலவை சபாநாயகர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அறிவித்தார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி ஆட்சியை இழந்ததோடு அதன் கீழ் போட்டியிட்ட மஇகா வேட்பாளர்கள் பலர் தோல்வியடைந்தனர்.

சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்ட மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் வரும் கட்சி தேர்தலில் தேசியத் தலைவர் பதவியை தற்காக்கப் போவதில்லை என சில நாட்களுக்கு முன் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று கூடிய கூட்டத்தில் மஇகா தேசியத் தலைவர் பதவிக்கு தாம் போட்டியிடவிருப்பதாக டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

No comments:

Post a Comment