Monday, 28 May 2018
நம்பியவர்களே 'துரோகிகளாக' மாறி முதுகில் குத்தினர்- டான்ஸ்ரீ கேவியஸ் ஆதங்கம்
ரா.தங்கமணி
படங்கள்: வி.மோகன்ராஜ்
தனக்கும் கட்சிக்கும் உண்மையாக இருப்பார்கள் என நம்பி உயர் பதவிகளையும் விருதுகளையும் வழங்கியவர்களே இன்று "துரோகிகளாக" மாறி முதுகில் குத்தி விட்டனர் என மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் வலியுறுத்தினார்.
இன்று எனக்கு எதிராக திரும்பி நிற்கும் தரப்பினர் சிலருக்கு டத்தோஸ்ரீ, டத்தோ போன்ற விருதுகளை வழங்கியுள்ளதோடு இருவரை செனட்டராக்கி துணை அமைச்சராகவும் உயர் பதவியில் அமர வைத்தேன்.
எனக்கு பிறகு கட்சியை சிறப்பாக வழி நடத்துவார்கள் முழுமையாக நம்பினேன். ஆனால் உயர் பதவியும் அங்கீகாரமும் வழங்கிய என் முதுகிலேயே குத்தி "துரோகிகளாக" மாறி விட்டனர் என மைபிபிபி கட்சியின் 65ஆவது ஆண்டுக் கூட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் டான்ஸ்ரீ கேவியஸ் இவ்வாறு கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment