Thursday, 17 May 2018

பேரா ஆட்சிக் குழு பெயர் பட்டியல் சுல்தானிடம் இன்று ஒப்படைப்பு


ஈப்போ-
பேரா மாநில ஆட்சிக்குழுவில் இடம்பெறும் 10 பேரின் பெயர் பட்டியல் இன்று  பேரா சுல்தான் நஸ்ரின் முஸுடினிடம் ஒப்படைக்கப்படும் என்று மாநில மந்திரி பெசார் அமாட் ஃபைசால் அஸுமு தெரிவித்தார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் பேரா மாநிலத்தை கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி எவ்வித வேறுபாடுமின்றி  அனைத்து கட்சிகளிலிருந்தும் ஆட்சிக்குழு உறுப்பினர் பெயர் பட்டியல் சுல்தானிடம் ஒப்படைக்கப்படும்.

ஒப்படைக்கப்பட்ட இந்த பெயர் பட்டியலை ஆராய்ந்து சுல்தானே தீர்மானிப்பார் என்று நேற்று இங்கு நடைபெற்ற வெற்றி விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு பேசினார்.

சுல்தானின் தீர்மானத்திற்கு பிறகு, ஆட்சி குழு உறுப்பினர்களின் பெயர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு விரைவில் செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் நடத்தப்படும்.

பெர்சத்து கட்சியிலிருந்து ஆட்சிக்குழு உறுப்பினரை நியமிப்பத்தில் தாம் ஒருபோதும் தடைவிதிக்க மாட்டேன் என்று அமாட் ஃபைசால் அஸுமு திட்டவட்டமாக கூறினார்.



No comments:

Post a Comment