Wednesday, 23 May 2018

‘சுத்தமான கரங்களோடு’ வாருங்கள்; அப்போதுதான் உதவி' - சிவநேசன் அதிரடி


கோ.பத்மஜோதி

ஈப்போ-
மாநில அரசாங்கத்தின் உதவி நாடி வருபவர்கள் உண்மை தகவலுடனும் அது சார்ந்த ஆவணங்களுடனும் வந்தால் மட்டுமே அவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் அதிரடி காட்டினார்.

உதவி தேவைப்படுபவர்கள் இன்னும் நிறைய பேர் உள்ளனர். ஆனால், பொய்யான தகவல்களை வழங்கி மானியம் பெறுவோரால் உண்மையான உதவி தேவைப்படுவோருக்கு அந்த உதவிகள் சென்றடைவதில்லை.

கடந்த கால ஆட்சியில் இதுபோன்ற தவறுகள் நிகழ்ந்துள்ளன. ஆனால், இப்போதைய பக்காத்தான் ஆட்சியில் இதுபோன்ற தவறுகள் நிகழாது. பொய் சொல்லி மானியத்தை பெற்று விடலாம் என்ற 'கனவு' இனி நிறைவேறாது

மாநில அரசின் உதவியை தேடி வரும் தனிநபரோ/ பொது இயக்கங்களோ உண்மையான தகவலோடு இன்னும் சொல்ல போனால் ‘சுத்தமான கரங்களோடு’ நாடி வந்தால் மட்டுமே சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என மாநில அரசு செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது சிவநேசன் அதிரடியாக கூறினார்.


No comments:

Post a Comment