Friday, 1 June 2018
துன் மகாதீரை சந்தித்தார் நரேந்திர மோடி
கோலாலம்பூர்-
நாட்டின் 7ஆவது பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் துன் மகாதீர் முகம்மதுவை சந்தித்து வாழ்த்து கூறினார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
இன்று காலை மலேசியா வந்தடைந்த நரேந்திர மோடி பெர்டானா புத்ராவில் துன் மகாதீரை சந்தித்தார்.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் சார்பில் பிரதமராக பொறுப்பேற்ற துன் மகாதீருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார் நரேந்திர மோடி.
துன் மகாதீரும் நரேந்திர மோடியும் சந்தித்துக் கொள்வது இதுவே முதன் முறையாகும். இதற்கு முன் 2015ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இறுதியாக மலேசியாவுக்கு வருகை புரிந்திருந்தார்.
இந்த சந்திப்பின்போது துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் வான் அஸிஸாவும் அவரது கணவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமும் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment