Sunday, 6 May 2018

சுங்கை சிப்புட் தேமுவுக்கு 'கறுப்பு பகுதியா?'; கிடையாது- டத்தோஶ்ரீ நஜிப்


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி தேசிய முன்னணிக்கு 'கறுப்பு பகுதி' அல்ல என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.

கடந்த இரு தேர்தல்களில்  எதிர்க்கட்சி வசமான சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி தேசிய முன்னணிக்கு 'கறுப்பு பகுதி' (Black Area) என கூறப்படுகிது.

ஆனால் இங்கு தேசிய முன்னணிக்கான ஆதரவு  வலுவாக உள்ளதாகவும் இத்தொகுதி தேசிய முன்னணியின் கோட்டையாக மீண்டும் உருவெடுக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்த டத்தோஶ்ரீ நஜிப், தேசிய முன்னணி வேட்பாளருக்கு இங்குள்ள மக்கள் முழுமையான ஆதரவு வழங்குவர் எனவும் அவர் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment