Monday, 28 May 2018

பத்துமலை திருத்தலத் தலைவர் பதவியை டான்ஶ்ரீ நடராஜா ராஜினாமா செய்ய வேண்டும்- அருண் துரைசாமி


ரா.தங்கமணி
படங்கள்: வி.மோகன்ராஜ்

பத்துமலை திருத்தலத்தில் காணப்படும் முறைகேடுகள் நிவர்த்தி செய்யப்பட அதன் நிர்வாகம் ஒட்டுமொத்தமாக கலைக்கப்படுவதோடு கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் பதவியிலிருந்து டான்ஶ்ரீ டத்தோ ஆர்.நடராஜா ராஜினாமா செய்ய வேண்டும் என ஆகமம் அணியின் ஒருங்கிணைப்பாளர் அருண் துரைசாமி வலியுறுத்தினார்.

பத்துமலை திருத்தல நிர்வாகம் ஒரு கட்டுப்பாட்டிக்குள் இயங்கிக் கொண்டிருப்பதை அனைவரும் அறிவர். பொதுவில் மக்களுக்காக செயல்பட வேண்டிய ஆலய நிர்வாகம் தன்னிச்சையாக செயல்படுவது பொதுமக்களில் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பத்துமலை திருத்தலத்தின் நிர்வாகம் இன்னமும் ஆர்.ஓ.எஸ். எனப்படும் தேசிய சங்கங்களின் பதவிலாகாவில் பதிவு செய்யப்படாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இதுவே ஆலய நிர்வாகம்   ஒரு வாரியத்தின் கீழ் செயல்படுவதாக கூறப்படுவது ஏற்புடையதாகாது.

மேலும் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பல தெய்வ சன்னிதிகள் அமைந்துள்ள நிலம் இன்னமும் ஆலயத்தின் பெயரில் பதிவு செய்யப்படாமல் அரசு நிலமாகவே உள்ளது.

ஆலயத்தை நாங்களே நிர்வகிப்போம் என கூறும் நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்காததோடு ஒரு தனி சாம்ராஜியத்தையே நடத்தி வருகின்றனர்.

பொதுமக்களின் பங்களிப்பும் சமூகச் சேவைகளுக்கும் ஒரு தலமாக விளங்க வேண்டிய பத்துமலை நிர்வாகமும் அதன்  தலைவரும் அதன் பொறுப்பிலிருந்து விலகி நிற்பதால் வரும் ஜூன் 17ஆம் தேதிக்குள் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என ஆகமம் அணி ஏற்பாட்டில் இன்று பெட்டாலிங் ஜெயா, சிவிக் சென்டரில் நடைபெற்ற 'பத்துமலை உருமாற்றத்திற்கான மக்கள் மாநாடு' கலந்துரையாடலில் உரையாற்றியபோது அருண் துரைசாமி இவ்வாறு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment