கோலாலம்பூர்-
தோள்பட்டையில்
ஏற்பட்ட வலியின் காரணமாக, பிகேஆர் கட்சியின் ஆலோசகர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம்
இன்று செராஸ் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார்.
தோள்பட்டை வலி
காரணமாகடத்தோஶ்ரீ அன்வார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிசியோதெராபி சிகிசச்சை பெற்று வருகிறார்
என அவரின் புதல்வி நூருல் இஸா தமது வாட்ஸ் அப் வலைத்தலத்தில் பதிவு செய்திருந்தார்.
கடந்த வியாழக்கிழமை
(16.5.2018) பொது மன்னிப்பு பெற்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் அன்வார். சிறையிலிருந்து விடுதலை பெற்ற பின்னர், தமது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடப் போவதாக கூறினார்
அன்வார்.
கடந்த 2017ஆம்
ஆண்டு செப்டம்பர் மாதம் கோலாலம்பூர் மருத்துவமனையிலிருந்து சுங்கை பூலோ சிறைக்கு செல்லும்
வழியில் ஏற்பட்ட சாலை விபத்தின் காரணமாக, 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்தே செராஸ்
மருத்துவமனையில் தோள்பட்டையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார் அன்வார்.
No comments:
Post a Comment