புத்ராஜெயா-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் துன் மகாதீர் முகமது தலைமையில் இன்று முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சில அதிரடியான முடிவுகளை துன் மகாதீர் அறிவித்தார்.
அமைச்சர்களின் சம்பளம் 10 விழுக்காடு குறைக்கப்படுவதோடு 'ஸ்பாட்' எனப்படும் தரை பொது போக்குவரத்து ஆணையம், ஜாசா, தேசிய பேராசியர் மன்றம் (எம்பிஏ), பெமாண்டு, ஜேகேகேகேபி ஆகிய 5 இலாகாக்கள் கலைக்கப்படுவதாக அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் துன் மகாதீர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment