Thursday, 31 May 2018
எம்ஆர்டி 3 திட்டம் ரத்து; கல்வி அமைச்சின் கீழ் 'பெர்மாத்தா' - பிரதமர் மகாதீர் அறிவிப்பு
கோலாலம்பூர்-
கோலாலம்பூர்- சிங்கப்பூர் இடையிலான அதிவேக ரயில் சேவை (HSR) திட்டத்தை ரத்து செய்த ஒரு நாளிலேயே எம்ஆர்டி 3 ரத்து செய்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பிரதமர் துன் மகாதீர்.
இன்று நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர் பேசிய துன் மகாதீர், முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோரின் தலைமையில் செயல்பட்ட 'பெர்மாத்தா' அமைப்பு இனி கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் என்றார்.
அதோடு இன்னும் பல அதிரடி அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.
* நாட்டின் கடனை அடைக்க மலேசியர்களிடமிருந்து நிதி திரட்டும் வகையில் 'தாபோங் ஹராப்பான் மலேசியா' (Tabung Harapan Malaysia) சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
* 41 கிரே ட் பெற்றுள்ள அரசு ஊழியர்களுக்கு 400 வெள்ளி போனசும் அத்ற்கு குறைவாக உள்ளவர்களுக்கு 200 வெள்ளி வழங்கப்படும. இது ஜூன் 6ஆம் தேதி வழங்கப்படும்.
* வரும் செப்டர்ம்பர் மாதல் பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) அகற்றப்பட்டு அதற்கு பதிலாக விற்பனை, சேவை வரி செம்படம்பர் மாதல் முதல் அமல்படுத்தப்படவுள்ளது.
* ரோன் 95 பெட்ரோல் விலை நிலைநிறுத்தப்பட்டுள்ளதோடு ரோன் 97 பெட்ரோல் விலை சந்தை விலையை பொறுத்து நிர்ணயிக்கப்படும்.
* நோன்புப் பெருநாளை முன்னிட்டு 2 நாட்களுக்கு முன்னதாக அனைத்து நெடுஞ்சாலைகளில் 50% கழிவு வழங்கப்படும்.
* பெருநாள் காலங்களில் விலை கட்டுப்பாட்டு திட்டத்தை அமல்படுத்த விவசாய ஆலோசனை மன்றம் அமைப்பதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment