புத்ராஜெயா-
பெர்னாமாவில் தமிழ்,சீன செய்திகள் இன்னும் 2 வாரங்களில் இடம்பெற வேண்டும் என தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவை தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சr கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தினார்.
இன்னும் இரு வாரங்களில் தமிழ், சீன மொழி செய்திகள் இடம்பெற வேண்டும் என அவர் பெர்னாமாவுக்கு உத்தரவிட்டார். இவ்விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் வெகு சீக்கிரம் இதனை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சொன்னார்.
இதன் தொடர்பில் இவ்வார இறுதிக்குள் அறிக்கை வழங்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், விரைவில் தமிழ், சீன மொழி செய்திகள் ஒளிபரப்ப நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என கூறினார்.
No comments:
Post a Comment