ரா.தங்கமணி
படங்கள்: வி.மோகன்ராஜ்
தேசிய முன்னணியின் கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவை ஏப்ரல் மாதம் 17ஆம் தேதியே எடுத்து விட்டேன். ஆனால் கட்சி உச்சமன்றக் கூட்டத்திற்கு கட்டுப்பட்டே அம்முடிவை அப்போது அறிவிக்கவில்லை என மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் குறிப்பிட்டார்.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இம்முடிவு எடுக்கப்பட்டு விட்டது.
ஆனால் இந்த முடிவு பொதுத் தேர்தலில் பாதகமான விளைவை ஏற்படுத்தி விடும் என உச்சமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க தேமுவில் இருந்து வெளியேறும் முடிவு அப்போது ஒத்தி வைக்கப்பட்டதாக டான்ஸ்ரீ கேவியஸ் கூறினார்.
No comments:
Post a Comment