Wednesday, 23 May 2018

வெ.143.75 மில்லியனை திரும்ப செலுத்துக; அருள் கந்தாவுக்கு லிம் உத்தரவு

புத்ராஜெயா-
அரசாங்கத்திற்கு 1எம்டிபி செலுத்த வேண்டிய 143.75 மில்லியன் வெள்ளி கடனை வரும் மே 31ஆம் தேதிக்குள் செலுத்துமாறு 1எம்டிபி-இன் தலைவரும் செயல்முறை அதிகாரியுமான அருள் கந்தாவுக்கு புதிய நிதி அமைச்சர் லிம் குவான் எங் அதிரடியாக உத்தரவிட்டார்.

இன்று தனது முதல் நாள் பணியை தொடங்கிய லிம் குவான் எங் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய கடனை 1எம்டிபி நிறுவனம் செலுத்த வேண்டும்.

வரும் ஜூன் 31ஆம் தேதி அருள் கந்தாவின் பணி நிறைவடையவுள்ளதால் வரும் மே 31க்குள் அந்த தொகையை செலுத்த வேண்டும் என லிம் குவான் எங் உத்தரவு பிறப்பித்தார்.

No comments:

Post a Comment