Tuesday, 22 May 2018
13 அமைச்சர்கள் பதவியேற்றனர்
கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் துன் மகாதீர் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 13 அமைச்சர்கள் இன்று பதவி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இன்று அரண்மனையில் நடைபெற்ற பதவியேற்புச் சடங்கில் மாமன்னர் சுல்தான் முகம்மட் வி முன்னிலையில் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த பதவியேற்புச் சடங்கிற்கு துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் தலைமை தாங்கினார்.
நிதியமைச்சர் லிம் குவான் எங், உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின், தற்காப்பு அமைச்சர் முகமட் மாட் சாபு, தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங், மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன், பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி உட்பட பலர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த பதவியேற்புச் சடங்கில் பிரதமர் துன் மகாதீர் முகம்மது, அரசாங்க தலைமைச் செயலாளர் டத்தோஶ்ரீ அலி ஹம்சா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment