Sunday, 27 May 2018

11 முறை சுடப்பட்ட ஆடவர் காயங்களுடன் உயிர் தப்பினார்

புக்கிட் மெர்தாஜம்-
முகமூடி அணிந்த ஆடவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 23 வயது ஆடவர் கடுமையான காயங்களுடன் உயிர் தப்பினார்.

கைத்தொலைபேசி விற்பனையாளரான தான் யீ சின், இன்று காலை தாமான் செந்தோசாவில் உள்ள உணவகத்தில் தனது நண்பருடன் உணவருந்தி விட்டு தனது காரில் ஜாலான் செந்தோசாவிலிருந்து ஜாலான் கூலிம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது வெள்ளை நிற காரில் வந்த முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் தான் யீயை நோக்கிச் சுட்டுள்ளார். 11 முறை சுடப்பட்ட நிலையில் மூன்று தோட்டாக்கள் மட்டுமே தானின் மீது பாய்ந்துள்ளன.

தோள் பட்டை, உடலில் 3 தோட்டாக்கள் பாய்ந்த நிலையில்  காரின் இடதுபுறமாக வெளியேறி உயிரை காப்பாற்றி கொண்டார் தான்.

முகமூடி அணிந்த அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் சூடுபட்ட தான் பொதுமக்களின் உதவியோடு புக்கொட் மெர்தாஜம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என செபெராங் பிறை தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் நிக் ரோஸ் அஸான் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் செக்‌ஷன் 307 கொலை முயற்சி சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது என அவர் சொன்னார்.

No comments:

Post a Comment