Tuesday, 22 May 2018

11 பைகளில் உள்ள பணம் 11 மணிநேரம் எண்ணப்பட்டது


கோலாலம்பூர்-
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் பெவிலியன் குடியிருப்பிலுள்ள மூன்று அடுக்கு மாடிவீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கைப்பற்ற 11 பைகளில் உள்ள பணத்தை எண்ணி முடிக்க போலீசாருக்கு 11 மணிநேரம் ஆனது.

இந்த 11 பைகளில் லட்சக்கணக்கான பல்வேறு நாணயங்கள் இருந்ததாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிக்கை கூறியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் 72 பைகளில் பணமும் 284 பொட்டலங்களில் நகையும் விலையுயர்ந்த கைப்பைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த 72 பைகளில் இன்று 26 பைகளில் உள்ள பணத்தை எண்ண போலீசார் எடுத்துச் சென்றனர். ஆயுனும் 26 பைகளில் 11 பைகளில் உள்ள பணத்தை மட்டுமே எண்ணியுள்ளனர். எஞ்சிய 15 பைகளை புக்கிட் அமான் குற்ற விசாரணை பிரிவுக்கு எடுத்துச் சென்றதாக அதன் இயக்குனர் டத்தோஶ்ரீ அமார் சிங் இஷார் சிங் கூறினார்.

காலை 10.00 மணி தொடங்கி இரவு 9.00 மணிவரை நடந்த பணத்தை எண்ணும் பணி நடைபெற்றது. எண்ணி முடிக்கப்பட்ட பணப்பைகள் பேங்க் நெகாராவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் எண்ணப்படும் என்றார் அவர்.

1எம்டிபி விசாரணையின் ஒரு பகுதியாக கடந்த வெள்ளிக்கிழமை டத்தோஶ்ரீ நஜிப்பின் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment