கோலாலம்பூர்-
அமைச்சரவையை அமைப்பதற்கு ஏதுவாக 10 அமைச்சர்களின் நியமனம் வெகு விரைவில் நடைபெறும் என பிரதமர் துன் மகாதீர் முகம்மது தெரிவித்தார்.
அமைச்சர்களாக நியமிக்கப்படுபவர்கள் பதவியேற்பதற்கும் மக்களவையை கூட்டுவதற்கும் இந்த நியமனம் இவ்வாரத்திற்குள் நடைபெறலாம் என அவர் சொன்னார்.
முதல்கட்டமாக 10 பேர் கொண்ட அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு அமைச்சரவை கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்த துன் மகாதீர், 25 பேர் கொண்ட முழுமையான அமைச்சரவையை அமைப்பதற்கு முன்னர் தற்காலிகமாக 10 முதல் 15 பேர் கொண்ட அமைச்சரவைக் குழு அமைக்கப்படும் என கூறினார்.
No comments:
Post a Comment