Saturday, 21 April 2018

பேரா ஜசெக சார்பில் 5 இந்திய வேட்பாளர்கள் போட்டி


ரா.தங்கமணி

ஈப்போ-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு பேரா மாநிலத்தில் போட்டியிடும் ஜசெக (டிஏபி) வேட்பாளர்கள் பட்டியல் நேற்றிரவு வெளியிடப்பட்டது.

பேரா மாநிலத்தில் நாடாளுமன்றத் தொகுதிக்கு இரு இந்திய வேட்பாளர்களும் சட்டமன்றத் தொகுதிக்கு மூன்று இந்திய வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

ஈப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதியில் எம்.குலசேகரன், பத்துகாஜா நாடாளுமன்றத் தொகுதிக்கு வீ.சிவகுமார் ஆகியோர் போட்டியிடவுள்ள நிலையில் புந்தோங் சட்டமன்றத் தொகுதிக்கு ஆதி.சிவசுப்பிரமணியம், சுங்காய் சட்டமன்றத் தொகுதிக்கு அ.சிவநேசன், பாசீர் பெடாமார் சட்டமன்றத் தொகுதிக்கு தெரான்ஸ் நாயுடு ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.

நேற்று இங்கு நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் ஜசெக சார்பில் 7 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர்.

No comments:

Post a Comment