Friday, 23 March 2018

சுங்கை சிப்புட்; இறுதி நேர வேட்பாளராகிறார் வேள்பாரி?

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் வெகு தொலைவில் இல்லை எனும் நிலையில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதிக்கு தேசிய முன்னணியின் இறுதி நேர வேட்பாளராக மஇகா தலைமை பொருளாளர் டத்தோஶ்ரீ எஸ்.வேள்பாரி களமிறக்கப்படலாம் என அனுமானிக்கப்படுகிறது.

கடந்த இரு தவணைகளாக எதிர்க்கட்சியிடம் வீழ்ந்து கிடக்கும் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் தேசிய முன்னணிக்கு ஏற்பட்டுள்ள சூழலில் இத்தொகுதியில் தேமுவுக்கான வெற்றி வாய்ப்பு 'கிரீன் சிக்னலில்' உள்ளது.

தற்போது மஇகாவின் ஒருங்கிணைப்பாளராக டத்தோ எஸ்.சோதிநாதன் களமிறங்கி தொகுதி கிளைத் தலைவர்களையும் தேர்தல் நடவடிக்கை மையங்களையும் பார்வையிட்டு வருகின்றார்.

ஆயினும் மஇகாவில் நிலவிய உட்பூசல், டத்தோஶ்ரீ பழனிவேல் தலைமைத்துவத்தை ஆதரித்தது, நீதிமன்ற வழக்கு போன்ற காரணங்களால் டத்தோ சோதிநாதனுக்கு எதிராக சில தலைவர்கள் திரும்பியுள்ள நிலையில் டத்தோ சோதிக்கு அடுத்த தேர்வாக டத்தோஶ்ரீ வேள்பாரி அமையக்கூடும்.

மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் ச.சாமிவேலு இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த நிலையில் அங்கு  தந்தைக்கு உள்ள செல்வாக்கை  தனக்கு சாதகமாக பயன்படுத்தி பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என வேள்பாரியும் அவரது ஆதரவாளர்களும் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment