Thursday, 15 March 2018

பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹக்கிங் காலமானார்






லண்டன்-
உலகின் தலைச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஸ்டீபன் ஹவ்கிங் இன்று (வயது 76) காலமானார்.

"எங்கள் அன்புமிக்க தந்தை இன்று காலமானார். எங்கள் தந்தை மிகப் பெரிய விஞ்ஞானி ஆவார். அவரின் பேரும் புகழும் எப்பொழுதும் நிலைத்து நிற்கும். எங்கள் தந்தைக்கு உறுதுணையாக இருந்த அனைத்து நல்லுலங்களுக்கும் நன்றி" என்று ஸ்டீபனின் பிள்ளைகளான லூசி, ராபர்ட், டிம் ஆகியோர் செய்தி குறிப்பில் தகவல் வெளியிட்டுள்ளனர்.


பிரிட்டிஷ் அறிவியல், இயற்பியல் நிபுணருமான ஸ்டீபன், லண்டன் கேம்ப்ரிட்ஜில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.

ஸ்டீபனின் இந்த திடீர் மறைவுக்கு உலகத் தலைவர்கள், விஞ்ஞானிகள் என பலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். 


No comments:

Post a Comment