Saturday, 10 February 2018
வசந்தபிரியா விவகாரம்: விசாரணைக்கு உதவ டேவிட் மார்ஷல் அழைக்கப்பட்டுள்ளார் - போலீஸ்
ஜோர்ஜ்டவுன் -
மாணவி வசந்தபிரியா விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு உதவும் பொருட்டு வாக்குமூலம் பதிவு செய்ய மலேசியத் தமிழர் குரல் தலைவர் டேவிட் மார்ஷல் உட்பட சிலரை போலீசார் அழைத்துள்ளனர் என பினாங்கு மாநில குற்றப்புலனாய்வு பிரிவு தலைவர் டத்தோ ஸைனோல் சமா தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பில் நிரூபிக்கப்படாத பல தகவல்கள் பகிரப்படுவதை அடுத்து, விசாரணைக்கு உதவும் பொருட்டு அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் ஒருவரின் கைத்தொலைபேசி களவு போனது தொடர்பில் இரண்டாம் படிவ மாணவியான வசந்தபிரியா, விசாரணை உட்படுத்தப்பட்டதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயற்சித்து. சிகிச்சை பலனிக்காமல் மரணமடைந்தது தொடர்பில் நிரூபிக்கப்படாத தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.
உண்மையில்லாத தகவல்களை பரப்புவோர் அதற்கான விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும்.
எங்களுக்கு உண்மையான தகவல்களே தேவை, இவ்விவகாரம் தொடர்பில் உண்மை தகவலை அறிந்திருப்போர் முன்வந்து வழங்கினால் அது விசாரணைக்கு இன்னும் உறுதுணையாக இருக்கும் என இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஸைனோல் சமா கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment