Thursday, 22 February 2018
"மக்கள் நீதி மய்யம்": புது கட்சியை தொடங்கினார் நடிகர் கமல்
மதுரை-
மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நடிகர் கமல்ஹாசன் இன்று மதுரையில் தனது அரசியல் கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்து கொடி ஏற்றி வைத்தார்.
'மக்கள் நீதி மய்யம்' எனும் பெயரில் அரசியல் கட்சியை தொடக்கி வைத்து பேசிய நடிகர் கமல், எல்லா முதல்வர்களுக்கும் இருக்கும் கொள்கைதான் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் உள்ளது. நல்ல தலைமை, தரமான கல்வி, தடங்கல் இல்லா மின்சாரம் ஆகிவை மக்களுக்கு கிடைக்க வேண்டும்.
ஊழலை குறைப்பதில் நமக்கும் பங்கு உள்ளது. இதுநாள் வரை வேடிக்கை பார்த்தோம். இனி அதை செய்யக்கூடாது. உங்கள் வாக்கின் மதிப்பு தெரியாமல் விற்று விட்டீர்கள். உங்களின் எல்லா பற்றாக்குறையும் பேராசையால் வந்துள்ளது. நல்ல கட்சிக்கு ஓட்டு போட்டிருந்தால், ஆறாயிரம் என்ன, வருடத்திற்கு 6 லட்சம்கூட கிடைத்திருக்கலாம்.
நம் கட்சி கொடியில் உள்ள 6 கைகள் 6 மாநிலங்களைக் குறிக்கும், நடுவில் இருக்கும் நட்சத்திரம் மக்களை குறிக்கும். மக்களையும் நீதியையும் மையமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி இது என கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment