Tuesday, 20 February 2018

சுரங்க பாதையில் இரு வாகனங்கள் மோதல்; வழக்க நிலைக்கு திரும்பியது நெடுஞ்சாலை



ஈப்போ-
ஈப்போவிலிருந்து கோலகங்சார் நோக்கி செல்லும் வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையின் 261.4 கிலோ மீட்டரில் உள்ள சுரங்க பாதையில் இரு கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதால் அச்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது.

இன்று காலை 11.30 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் மோதி விபத்துக்குள்ளான இரு வாகனங்கள் தடம் புரண்டு கிடந்ததால் வேறு வாகனங்கள் செல்ல முடியாத சூழல் நிலவியது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு, மீட்புப் படையினர் அவ்வாகனங்களை அப்புறப்படுத்தினர்.

விபத்துக்குள்ளான வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அங்கு வாகன நெரிசல் இல்லை என பிளர் நிறுவனம் தனது டுவிட்டர் அகப்பக்கத்தில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment