Saturday, 27 January 2018

கூடுதலாக 8 தொகுதிகளை கைப்பற்றுவோம்- பேராக் ஜசெக


ஈப்போ-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலின்போது பேராக் மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் கூடுதலாக 8 தொகுதிகளை கைப்பற்றி தேசிய முன்னணியை விட பெரும்பான்மை வகிக்கும் என பேராக் ஜசெக இளைஞர் பிரிவு தெரிவித்துள்ளது.

இத்தேர்தலில் மஞ்சோய், குபு காஜா, கமுண்டிங், லுபோன் மெர்பாவ், மனோங், ருங்குப், சங்காட் ஜோங், பாசீர் பஞ்சாங் ஆகிய தொகுதிகளை வெல்ல இலக்கு கொண்டுள்ளதாக அதன் தலைவர் வோங் கா வோ தெரிவித்தார்.

தற்போதுள்ள 24 சட்டமன்றத் தொகுதிகளை தக்கவைத்துக் கொள்வதோடு கூடுதலாக 8 தொகுதிகளை கைபற்றி 32 தொகுதிகளை கொண்டு பேராக் மாநில ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என பேராக் பக்காத்தான் இளைஞர் பிரிவு அறிமுக நிகழ்வில் அதன் தலைவர் அஹ்மாட் பைசால் அஸுமு கூறினார்.

 வரும் தேர்தலில் போட்டியிட பக்காத்தான் கூட்டணி இளையோருக்கு முன்னுரிமை வழங்கும் எனவும் இதில் 20 விழுக்காட்டுக்கும் அதிகமான இளைஞர்கள் வேட்பாளர்களாக களமிறங்குவர் எனவும் அவர் சொன்னார்.

No comments:

Post a Comment