Friday, 22 December 2017

போலீசார் சுட்டதில் இரு கொள்ளையர்கள் பலி

ஷா ஆலம்-
செக்‌ஷன் 7இல் உள்ள வீடொன்றில் நுழைந்து கொள்ளையிட முயன்ற மூன்று ஆயுதம் ஏந்திய கொள்ளையர்களை நோக்கி போலீசார் சுட்டதில் இருவர் மரணமடைந்த வேளையில் ஒருவன் தப்பியோடினான்.

இன்று அதிகாலை 3.40 மணியளவில் வீட்டை உடைத்து கொள்ளையிட முயல்வதாக பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையக அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

அப்போது சந்தேகத்திற்குரிய 3 நபர்கள் பாராங் கத்தியுடன் போலீசாரை தாக்க வந்தனர். கட்டாய சூழலில் போலீசார் இரு ஆடவர்களை நோக்கிச் சுட்டதில் அவர்கள் மரணமுற்றனர். ஓர் ஆடவன் தப்பியோடினான் என புக்கிட் அமான் குற்ற விசாரணை இலாகா இயக்குனர் டத்தோஶ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் முகமட் தெரிவித்தார்.

30 வயது மதிக்கத்தக்க ஆடவர்களின் சடலங்களை பரிசோதித்ததில் பாராங், வீட்டை உடைப்பதற்கான ஆயுதங்கள் ஆகியவை இருந்தன என்றார் அவர். சந்தேகத்திற்குரி ஆடவர்கள் 'கேங் ரெந்தாவ்' குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆவர்.  வெளிநாட்டைச் சேர்ந்த இந்த கேங் உறுப்பினர்கள் நெடுஞ்சாலை ஓரம் உள்ள குறிப்பாக செக்‌ஷன் 6,7,8 ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் கொள்ளையிட்டு வருகின்றனர் என்றார் அவர்.

No comments:

Post a Comment