Sunday, 10 December 2017

மண்டை ஓடும், எலும்புகளும் கண்டெடுப்பு


சிரம்பான் -
ஓர் உணவகத்தின் அருகில் மனித எலும்பும்  மண்டை ஓடும் இருப்பதை கண்ட இளைஞர் அதிர்ச்சிக்குள்ளானார்.

இது குறித்து கருத்துரைத்த சிரம்பான் வட்டார போலீஸ் துணைத் தலைவர் சூப்பிரிடெண்டன்ட் சுலிஸ்மீ அஃபெண்டி சுலைமான், பிற்பகல் 2.30 மணியளவில் இப்பகுதியில் துப்புரவுப் பணி மேற்கொண்டபோது சம்பந்தப்பட்ட இளைஞர் மண்டை ஓட்டை பார்த்துள்ளார்.

இது தொடர்பில் கே9 பிரிவினர் களமிறங்கி சோதனை மேற்கொண்டனர்.
இப்பகுதியில் எவ்வித ஆயுதங்களும் கிடைக்கப்பெறாத நிலையில் எவ்வித துர்நாற்றத்தையும் தாங்கள் இதுவரை உணர்ந்ததில்லை என இங்கு பணியாற்றுபவர்கள் தெரிவித்தனர்.

தற்போது வரை இச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என அவர் சொன்னார்.

No comments:

Post a Comment