புனிதா சுகுமாறன்
ஈப்போ-
வசதி குறைந்த கிறிஸ்துவ அன்பர்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் எனும் நோக்கில் ஈப்போ பாராட் மஇகா தொகுதி காங்கிரஸ் உதவிப் பொட்டலங்களை வழங்கியது.
ஒவ்வொரு பெருநாள் காலங்களின்போதும் வசதி குறைந்த மக்களுக்கு உதவுவஹை போல இவ்வாண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு உதவிப் பொட்டலங்களை வழங்குவதாக அதன் தலைவர் டான்ஶ்ரீ ஜி.இராஜு கூறினார்.
இன்று கேஐஏ மண்டபத்தில் நடைபெற்ற அன்பளிப்பு நிகழ்வில் புந்தோங் வட்டாரத்தில் வாழும் 180 வசதி குறைந்த குடும்பங்கள் இந்த உதவிப் பொட்டலங்களைப் பெற்றுக் கொண்டனர்.
No comments:
Post a Comment