ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளுர் வேட்பாளர் களமிறங்குவது இறைவனின் ஆசீர்வாதமே. இறைவன் ஆசீர்வதித்தால் அது நடந்தேறும் என பிரதமர் துறை துணை அமைச்சர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி தெரிவித்தார்.
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் உள்ளூர் வேட்பாளர் களமிறங்கலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது. உள்ளூர் வேட்பாளர் குறித்து கருத்து கேட்டபோது, வேட்பாளர் யார் என்பதை தேமு தலைமைத்துவம் முடிவு செய்யும். அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். உள்ளூர் வேட்பாளர் விவகாரமும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்ற அவர், இறைவன் ஆசீர்வதித்தால் அது நடந்தேறும் என்றார்.
இது குறித்து சுங்கை சிப்புட் தொகுதி மஇகா தலைவர் எம்.இளங்கோவனிடம் கேட்டபோது, இத்தொகுதியில் வேட்பாளராக களமிறங்க 4 பேரின் பெயர்களை தேமு தலைமைத்துவத்திடம் சமர்ப்பித்துள்ளதாக மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.சுப்பிரமணியம் முன்பு தெரிவித்திருந்தார். அதில் உள்ளூர் மஇகாவினர் ஒருவரின் பெயரும் இருப்பதாக கூறினார்.
அவ்வகையில் உள்ளூர் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. வேட்பாளர் யாராக இருந்தாலும் தேமு வெற்றியை முன்னிறுத்தியே தொகுதி மஇகா களப்பணி ஆற்றும் என இளங்கோவன் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment