Wednesday, 27 December 2017
மலேசிய கருணை அறவாரியத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்களுக்கான காசோலை வழங்கப்பட்டது
சுங்கை சிப்புட்-
அடுத்தாண்டுக்கான பள்ளித் தவணைக் காலம் தொடங்க இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிச் சீருடைகள், புத்தகப்பை, காலணி,பள்ளி உபகரணப் பொருட்கள் ஆகியவற்றை பொது இயக்கங்களும் அரசியல் கட்சியினரும் வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
அவ்வகையில் வறுமை சூழலில் உள்ள குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு பள்ளிச் சீருடைகள், காலணி, புத்தகப்பை, காலுறை, உபகரணப் பொருட்கள் ஆகியவற்றை வாங்குவதற்கான காசோலையை அண்மையில் மலேசிய கருணை அறவாரியம் வழங்கியது.
இவ்வட்டாரத்தில் உள்ள 7 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 110 மாண்வர்களுக்கு இந்த காசோலை வழங்கப்பட்டது. இந்த காசோலையைக் கொண்டு அருகிலுள்ள தெ ஸ்டோர் பேரங்காடியில் அவர்களை இப்பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
இந்த அறவாரியத்தின் உறுப்பினர்களாக 150 பேர் மாதந்தோறும் வழங்கும் நன்கொடையின் மூலம் பள்ளி மாணவர்களுக்கான இத்தகைய நடவடிக்கைகம் மேற்கொள்ளப்படுகின்றன என அதன் தலைவர் குணாளன் சேகரன் தெரிவித்தார்.
இந்த அறவாரியத்தின் தோற்றுனர் இம்மானுவேல் ஜோசப்பின் வழிகாட்டல் மூலம் கூலிம், சுங்கைப்பட்டாணி, பினாங்கு, நிபோங் தெபால், பட்டவொர்த் உட்பட பல இடங்கள் மாணவர்களுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பள்ளி தொடங்கும்போது மாணவர்கள் புது ஆடை உடுத்தி புத்துணர்ச்சியுடன் பள்ளிக்குச் செல்ல வேண்டும் எனும் நோக்கில் பள்ளிச் சீருடை, புத்தகப்பை, காலணி போன்றவற்றை வழங்குவதாக அவர் சொன்னார்.
இந்நிகழ்வில் மலேசிய இந்து சங்கத்தின் சுங்கை சிப்புட் தலைவர் ஜெயராமன், கோபாலன், கதிர்வேலு, சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு காசோலைகளை வழங்கினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment