சென்னை-
நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் பல அவதாரங்களை எடுத்த தனுஷ் 'ப.பாண்டி' படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார்.
ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இத்திரைப்படத்தின் மூலம் வெற்றி இயக்குனராகவும் தனது முத்திரை பதித்தார் தனுஷ்.
இந்நிலையில் தனது அடுத்த படத்தை பற்றி டுவிட்டரில் உறுதி செய்துள்ளார் தனுஷ். ஶ்ரீ தேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்காக தனது அடுத்த படத்தை இயக்குகிறார் தனுஷ்.
நடிகர் தனுஷ் தற்போது 'வடசென்னை', என்னை நோக்கி பாயும் தோட்டா', 'மாரி-2' ஆகிய படங்களிலும்
தான் அடுத்து இயக்கப்போகும் படத்தை பற்றி டுவிட்டரில் பதிவிட்டுள்ள தனுஷ், ''எக்ஸ்டிரானரி ஜர்னி ஆஃப் ஃபாகிர்' என்ற ஆங்கில படத்தின் மூலம் ஹாலிவூட்டிலும் கால் பதிக்கின்றார்.
No comments:
Post a Comment