ரொம்பின் -
4 வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தொன்றில் இருவர் கொல்லப்பட்டனர். இவ்விபத்து குவாந்தான் - சிகாமட சாலையின் 102.8ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.
மாலை 6.00 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் இரு மோட்டார் சைக்கிள்களும் ஒரு லோரியும் ஒரு வாகனமும் சிக்குண்டன.
இது குறித்து கருத்துரைத்த ரொம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் டிஎஸ்பி அஸ்லி முகமட் நோர், மரணமடைந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மழை பெய்ததால் சாலை ஏற்பட்ட ஈரப்பதமே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆயினும் இதற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
No comments:
Post a Comment