கோலாலம்பூர்-
இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் மலேசிய வாழ் அனைத்து கிறிஸ்துவ அன்பர்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துக் கொண்டார்.மலேசியர்கள் அனைவரும் தங்களுக்கு இடையே அன்பை விதைக்க வேண்டும். காலம் தற்போது மிகவும் வேகமாகச் சென்றுக் கொண்டிருப்பதால் 2017ஆம் ஆண்டிக்கான அனைத்து சாதனைகளையும் மிகவும் விரைவாக அனுபவித்து விட்டோம் என தமது டுவிட்டர் செய்தியில் அவர் பதிவிட்டுள்ளார்.
இவ்வாண்டு இறுதி மிகவும் இனிமையாக நிறைவடைந்துள்ளதால் வரும் புத்தாண்டை மலேசியர்கள் சிறந்த தீர்மானத்துடன் வரவேற்க வேண்டும் என கிறி௶ஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் நிதி அமைச்சருமான டத்தோஶ்ரீ நஜிப் இவ்வாறு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment