Monday, 11 December 2017

மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன் - அ.சிவநேசன்



(புகழேந்தி)
சுங்கை சிப்புட்-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றால் அங்கு நிலவும் வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே எனது முதல் கடமையாகு என சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் குறிப்பிட்டார்.

இத்தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்குவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. கட்சி தலைமைத்துவம் முடிவு செய்தால் கண்டிப்பாக வேட்பாளராக களமிறங்குவேன்.

கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது சுங்காய் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கினேன். இத்தேர்தலில் நான் வெற்றி பெற்றால்  அங்கு நிலவும் வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே எனது பணி என வாக்குறுதி அளித்தேன்.

அதேபோல் வெற்றி பெற்று மாநில அரசையும் கைப்பற்றி பக்காத்தான் கூட்டணி ஆட்சியமைத்தபோது அங்கு ஏற்பட்ட வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு கண்டேன்.

அதேபோன்று சுங்கை சிப்புட் மக்கள் பிரதிநிதியாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால்  அங்கு  நிலவும் வெள்ளப் பிரச்சினைக்கு முதலில் தீர்வு காண்பேன் என் சிவநேசன் குறிப்பிட்டார்.

அண்மைய காலமாக சுங்கை சிப்புட் வட்டாரத்தில் வெள்ளப் பிரச்சினை தலைதூக்கவதோடு அதனால் குடியிருப்பாளர்களும் வர்த்தகர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment