ஈப்போ-
அதிகரித்து பொருள் விலையேற்றத்தை சமாளிக்க அடுத்தாண்டு பள்ளி தவணை தொடங்கப்படும்போது நாடு தழுவிய அளவில் பள்ளி பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என மலேசிய பள்ளி பேருந்து நடத்துனர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
பேருந்து உபரி பாங்களின் பொருள் விலை உயர்வு கண்டிருப்பதால் அதனை சமாளிக்க முடியாத சூழலை பேருந்து ஓட்டுனர்கள் எதிர்கொண்டுள்ளனர். இந்த செலவுகளை எதிர்கொள்வதற்கு ஏதுவாக பள்ளி பேருந்து கட்டணம் உயர்த்தப்படுகிறது என இந்த கூட்டமைப்பின் தலைவர் முகமட் ரோபிக் முகமட் யூசோப் குறிப்பிட்டார்.
கட்டணத்தை உயர்த்துவதற்கு பேருந்து ஓட்டுனர்கள் விரும்பவில்லை. ஆனால் நடப்பு சூழலை சமாளிக்க இத்தகைய முடிவு அவசியமாகிறது. புதிய கட்டண நடைமுறையின்படி 10 வெள்ளியிலிருந்து 20 வெள்ளி வரை உயர்வு காணப்படலாம்.
பள்ளி பேருந்து கட்டணத்தை உயர்த்துவதற்கு நாட்டிலுள்ள 18,000 பேருந்து நடத்துனர்களுக்கும் விரும்பவில்லை. ஆனால் பொருட்களின் விலையேற்றத்தை சமாளிக்க கட்டண உயர்வு அவசியமாகிறது என கூட்டமைப்பின் ஆறாவது பொதுக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
தற்போது ஒரு மாணவருக்கு நகர்ப்புறத்தில் உள்ளவர்கள் 80 வெள்ளி முதல் 100 வெள்ளி வரையிலும் உட்புறப் பகுதியில் உள்ளவர்கள் 60 வெள்ளி வரையில் மாதாந்திர கட்டணம் செலுத்துகின்றனர்.
No comments:
Post a Comment