Monday, 1 January 2018
இருவேறு சாலை விபத்துகளில் இந்திய பெண்ணும் மூதாட்டியும் மரணம்
ஷா ஆலம்-
இரு வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர். பேருந்து மோதியதில் ஒரு மூதாட்டியும் கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்துக்குள்ளானதில் இந்திய இளம் பெண்ணும் மரணமடைந்தனர்.
இன்று காலை 8.00 மணியளவில் செக்ஷன் 18இல் சாலையை கடக முற்பட்ட மூதாட்டியை பேருந்து மோதியது. செக்ஷன் 16இல் உள்ள கொமுயூட்டர் ரயில் முனையத்தில் பயணிகளை ஏற்றி சென்றபோது திடீரென சாலை கடந்த மூதாட்டியை பேருந்து மோதியது. பேருந்தை நிறுத்த அதன் ஓட்டுனர் அதன் பிரேக் பிடித்தபோதும் நிறுத்த முடியாமல் பேருந்து மோதி தள்ளியது.
இதில் தலையிலும் உடம்பிலும் பலத்த காயங்களுக்கு ஆளான மூதாட்டி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார் என ஷா ஆலம் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் சூப்பிரிடென்டண்ட் நெக் ஸைடி கூறினார்.
அதோடு, கூட்டரசு நெடுஞ்சாலையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மற்றொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் குமாரி கே.பவாணி (வயது 22) சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
இச்சம்பவத்தில் பவாணி செலுத்திய ஈஸ்வரா காரை கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பை மோதியதில் பலத்த காயங்களுக்கு ஆளானதில் அவர் மரணமடைந்தார். அவருடன் பயணித்த அவரின் சகோதரி கே.வனஜா (வயது 24) காயங்களின்றி உயிர் தப்பினார்.
இவ்விரு சம்பவங்களும் 1987 சாலை போக்குவரத்து சட்டம் 41 (1)இன் கீழ் விசாரிக்கப்படுவதாக அவர் சொன்னார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment