Monday, 1 January 2018

'அரசியல் கெட்டு விட்டது; எல்லாத்தையும் மாத்தனும்; அரசியலுக்கு வருகிறேன்'- நடிகர் ரஜினிகாந்த்


சென்னை-
'தமிழ்நாட்டில் அரசியல் கெட்டு போய்விட்டது. ஜனநாயகம் சீரழிந்துவிட்டது. இதை எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். அதனால் அரசியலுக்கு வருகிறேன். இது காலத்தின் கட்டாயம்' என நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை இன்று உறுதி செய்தார்.

ரஜினி அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்று பல ஆண்டுகளாக நீடித்து வந்த கேள்விக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

'நான் அரசியலுக்கு வருவது உறுதி. வரும் சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். உள்ளாட்சி தேர்தலுக்கு கால அவகாசம் இல்லாததால் போட்டியிடவில்லை. பணம், பெயர், புகழுக்காக அரசியலுக்கு வரவில்லை. கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஆயிரம் மடங்கு அதை மக்கள் கொடுத்திருக்கிறார்கள்.

நான் அரசியலுக்கு வருவதை பார்த்து பயம் இல்லை. மீடியாவைப் பார்த்துதான் பயம். நான் எதையாவது சொல்ல அது விவாதமாகிறது' என ரஜினிகாந்த் பேசினார்.

கடந்த 6 நாட்களாக சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களைச் சந்தித்து வரும் ரஜினிகாந்த், கடைசி நாளான இன்று தனது அரசியல் பயணத்தை உறுதி செய்துள்ளார்.

No comments:

Post a Comment